
கேரளா மாநிலம் குட்டப்புழாவில் மிதுன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் மாணவியின் தந்தைக்கும், சகோதரனுக்கும் அனுப்பியுள்ளார். இதனால் காவல்துறையினர் வாலிபரை கைது செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதில் மாணவியுடன் நெருக்கமான பழக்கத்தில் மாணவிக்கு தெரியாமல் தனது செல்போனில் அந்தரங்க காட்சிகளை மிதுன் பதிவு செய்துள்ளதாகவும், பின்னர் அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக கூறி மாணவியின் தந்தை மற்றும் சகோதரருக்கு வாட்ஸப் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் மாணவியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவதுராக பேசவும் மிதுன் நோக்கம் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட சைபர் செல் உதவியுடன் விசாரணை குழுவினர் மிதுனின் செல்போனில் இருந்த இடத்தை கண்டு பிடித்ததோடு அவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதோடு மாணவியின் அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டுபிடித்த காவல்துறையினர் செல்போனை தடவியல் ஆய்வுக்கு அனுப்பினர்.
மேலும் மாணவியின் தாயார் அளித்த புகாரின் பெயரில் ஐடி சட்டம் மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவியின் வீட்டின் குளியல் அறையிலும் சில வீடியோக்கள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையெல்லாம் வைத்து மிரட்டி மிதுன் மாணவியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.