சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் லத்தீப்பை தேடி வந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த லத்தீப்பை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.