
கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சேமகோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பிரகாசுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது இரு வீட்டாரும் மணமகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசை குறித்து பேசி முடிவெடுத்தனர்.
இதனையடுத்து பிரகாஷும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணையாக கூடுதல் நகைகள் வேண்டும் என கேட்டதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பிரகாஷ் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.