திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் சியாமளாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த வளையல் என 7 1/2 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சியாமளா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை பறித்த ராஜன் என்பவரை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
எப்படி தான் மனசு வந்துச்சோ? மரத்தடியில் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற மர்ம நபர்… ஷாக்கான பொதுமக்கள்… போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதி பகுதி சாலையோர மரத்தடியில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மக்கள் குழப்பம் அடைந்து மரத்தடியில் சென்று பார்த்தபோது ஒரு பைக்குள் சிசு ஒன்று இருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த…
Read more“என்னை பார்த்து குரைக்குது…” கல்லை தூக்கி போட்டு நாயை கொன்ற முதியவர்…. போலீஸ் விசாரணை….!!
சென்னை மாவட்டம் திருவொற்றியூரை சேர்ந்தவர் தர்மராஜ். கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தர்மராஜை பார்த்து அடிக்கடி குரைத்தது. இதனால் தர்மராஜ் ஒரு பெரிய கல்லை தூக்கி நாயின் வயிற்று பகுதியில் அடித்துள்ளார்.…
Read more