கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரளப்பதி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் பூவளபருத்தியூர் அருகே இருக்கும் தனியார் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று ஆனந்த் வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து கம்பியை பிடித்துக் கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பியுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் ஆனந்த் தவிப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் ஆனந்தை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.