செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் ஜாதிக்கும் –  மதத்துக்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அண்ணா திமுக கட்சி ஒன்னு தான். இன்னைக்கு ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெறுறாங்கன்னு சொன்னா..  பொன்மலைச் செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி,  …இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி… ஏராளமான திட்டங்களை  கொண்டு வந்த காரணத்தினால் தான் இன்றைக்கு கல்வியில சிறந்திருக்கிறாங்க…

தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைக்கு உயர்ந்த நிலைக்கு வருவதற்கு காரணம் அண்ணா திமுக அரசாங்கம். அண்ணா திமுக அரசாங்கத்துல கல்வி புரட்சி…  அதன் மூலமாகத்தான் கிராமத்திலிருந்து நகரம் வரை ஒடுக்கப்பட்ட , நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்கல்வி பட்டப் படிப்பிலே படிக்க கூடிய சூழலை உருவாக்கியது அண்ணா திமுக கட்சி. எனவே அவர்களின் நலன் பற்றி பேசுவதற்கு வேற எந்த கட்சிக்கும் அருகதையும் கிடையாது, தகுதியும் கிடையாது.

இது எல்லாம் உட்கட்சி பிரச்சனை… இத நாங்க வந்து வெளியில பேச முடியாது. கழகத்தை பலப்படுத்திட்டு இருக்கோம். விரைவாக கழகத்தில் அனைத்து பணிகளும் நிரப்பப்படும். இப்போ தேர்தல் இல்லையே … தேர்தல் ஓராண்டு இருக்குது. தேர்தல் வருகின்ற பொழுது நிச்சயமாக உங்களை அழைத்து எந்தெந்த கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்று சொல்லுவோம். ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி பற்றி சொல்லியாச்சு.

உங்க கண்ணுக்கு அப்படிப்படுது. நாங்க என்ன செய்யறது ? எங்க கண்ணுக்கு அப்படி படல. ஏன்னா, அவருக்கு கேட்க வேண்டிய கேள்விய அங்க போய் கேளுங்க. எங்க கிட்ட கேக்குற கேள்வியை கேளுங்க. நாங்க வந்து தெளிவா இருக்கிறோம்.  அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மிகப்பெரிய இயக்கம். பொன்மலை செம்மல் புரட்சித் தலைவர் காலத்திலும் சரி.. இதய தெய்வம் தலைவி அம்மா காலத்திலும் சரி… எப்படி கூட்டணி அமைத்தார்களோ… அதேபோல் காலம் கணித்து வருகின்றது… நேரம் வரும்போது நிச்சயமாக எல்லா வெளிப்படையாக பேசுவோம். இப்போ தேர்தல் வர ஓராண்டு இருக்குது. அதற்குள் அவசரம் இல்லை. நாங்க ஏற்கனவே பாரதிய ஜனதா உறவு எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்தி விட்டோம் என தெரிவித்தார்.