டயப்லோ IV என்ற ஆன்லைன் கேமிங் விளையாட்டு சமீபத்தில் பல பிரபலங்கள் விளையாடுகின்றனர். இதேபோன்று உலகத்தில் மிகப்பெரிய பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் இந்த வீடியோ கேமை விளையாடி வருகிறார். இந்த விளையாட்டில் லீடர் போர்டில் முதலிடத்தை எலான் மாஸ்க் பிடித்து உள்ளார். அதன் பின்னர் பாத் ஆஃப் எக்ஸல் 2 என்ற  வீடியோ கேமையும் விளையாடி வந்தார். இந்த விளையாட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென எலான் மஸ்கிருக்கு விளையாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிப்பு ஒன்று வந்தது.

அந்த அறிவிப்பில் “மிக வேகமாக பல செயல்களை செய்துள்ளீர்கள்,  நீங்கள் வெளியேற்றப்பட்டீர்கள்” என்ற எச்சரிக்கை அறிவிப்பு வீடியோ கேமின் ஸ்கிரீனில் வந்துள்ளது. இதனை ஸ்கிரீன் ஷாட் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அதில் கிண்டல் அடிக்கும் விதமாக “சிறிய அளவில் கூட அதை நான் செய்யவில்லை” என்ற வரிகளுடன் பதிவு செய்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.